11th May 2023 18:33:48 Hours
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் படையினர் வெசாக் போயா தினத்தன்று (மே 05) முகாம் வளாகத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
செவனப்பிட்டி சுசிரிகம சாம விகாரையின் பிரதமகுருவான வண. சுசிரிகம சங்கரக்கித தேரர் அவர்களினால் வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கும் சேவையாற்றும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டதுடன், 'போதி பூஜை' மற்றும் 'தர்ம' சொற்பொழிவுகளும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள முகாம் வளாகத்திற்கு அருகாமையில், புனானியை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 மக்களுக்கும் பிரதான வீதியில் பயணித்த பயணிகளுக்கும் சவ்வரிசி கஞ்சி வழங்கப்பட்டது. மேலும், மாலையில் அதே இடத்தில் பிரமாண்டமான மற்றும் வண்ணமயமான வெசாக் கூடுகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.