26th February 2024 15:16:11 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 231 வது காலாட் பிரிகேடின் 12 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 2024 பெப்ரவரி 22 அன்று அரலகங்வில 'பிரபோதனி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ' பிள்ளைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்து கொண்டு சிறுவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
திருமதி கிறிஸ்டின் டி சில்வா தலைமையிலான ‘ரு ஆச்’ அமைப்பு திரு. திருமதி.பக்ஷவீர மற்றும் திரு. திருமதி சில்வா ஆகியோருடன் இணைந்து பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.