Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th April 2024 15:31:54 Hours

23 வது காலாட் படைப்பிரிவில் ‘இப்தார்’ நிகழ்வு

இஸ்லாமியரின் ரமலான் மாதத்தில் சூரிய அஸ்தமனத்தில் நோன்பு துறக்கும் ‘இப்தார்’ நிகழ்வு 23 ஏப்ரல் 2024 அன்று புனானி 23 காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வின் போது 23 காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றதுடன் அனைத்து சமூகத்தினரிடையேயும் மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பின்னர், நோன்பு துறப்பதற்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் இஸ்லாமிய நடைமுறையின் அடையாளமாக குளிர்பானம் வழங்கப்பட்டது. மௌலவி எம்.ஷகீல் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் நோன்பு கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் இலங்கையில் உள்ள ஏனைய சமய நம்பிக்கைகளுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வலியுறுத்தும் சொற்பொழிவை நிகழ்தினார்.

அதைத்தொடர்ந்து, இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி பிரார்த்தனை நடத்தினர். நிகழ்வின் கடைசிப் பிரிவாக, பங்கேற்பாளர்கள், கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவு தளபதி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பங்கேற்பாளர்கள் தங்கள் மத நம்பிக்கையை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு அமைப்பாளர்களைப் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் 40 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 231, 232, மற்றும் 233 வது காலாட் பிரிகேட் தளபதிகள், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 23 காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.