Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th October 2023 08:27:08 Hours

23 வது காலாட் படைப்பிரிவினால் புதிய உலர் உணவு கடை திறப்பு

23 வது காலாட் படைப்பிரிவு வளாகத்தினுல் புதிதா நிறுவப்பட்ட இலங்கை இராணுவ சேவை படையணியின் 440 வது கூட்டு படையணியின் உலர் உணவுக்கடை செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 24) இடம்பெற்ற நிகழ்வின் போது படையினரிடம் கையளிக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜி அவர்களினால் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் வேண்டுகேளுக்கிணங்க ஒக்டோபர் 24 அன்று புதிய கடை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

அன்றைய பிரதம விருந்தினரை 23 வது காலாட் படைப்பிரிவு தளபதி வரவேற்பதற்கு முன்னர் அவருக்கு காலாட் படைப்பிரிவு நுழைவாயிலில் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டது.

23 வது காலாட்படைபிரிவின் தளபதி மற்றும் பணிநிலை அதிகாரிகளுடன் கிழக்கு தளபதி புதிய கடையில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று முழு திட்டத்தையும் பார்வையிட்டார். இந்த வசதியை முறையான பராமரிப்பிற்காக திட்டத்தை விரைவுபடுத்தியதற்காக பணிநிலை அதிகாரிகள் மற்றும் படையினரை கிழக்கு தளபதி பாராட்டினார்.