05th October 2023 19:46:36 Hours
23 வது காலாட் படைப்பிரிவின் படையினர் பூனானி, வெலிகந்த பிரதேசத்தில் பெரும்போகத்தில் 20 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெற்செய்கையை செய்திருந்தனர். பல சிப்பாய்களின் ஒன்றுகூடலுக்கு மத்தியில் செப்டெம்பர் 29 பாரம்பரியமான ‘அலுத்சஹல்மங்கல்ய’ (அறுவடை விழா) நிகழ்வின் போது முதல் அறுவடையை செய்தனர்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் முயற்சியில் சில மாதங்களுக்கு முன்பு அந்த சதுப்பு நிலங்கள் படையினரால் உழவு செய்யப்பட்டு நெல் விதைத்தனர்.
படையினர் பல மாதங்களாக வயல்களைப் பராமரித்து, பருவத்தின் முடிவில் தேவையான அறுவடையைப் பெறுவதில் வெற்றி பெற்றனர். பழங்கால மரபுகளின்படி அறுவடையின் முதல் பங்கு புத்தருக்கும் கணபதிக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 23 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டதை, அப்பகுதியில் உள்ள விவசாய சமூகத்தினர் பலரும் கண்டுகளித்தனர்.