15th June 2024 08:11:20 Hours
23 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஜூன் 12 ம் திகதி வரைபட ஆய்வு தொடர்பான விரிவுரை நடத்தப்பட்டது. மதுருஓயா விசேட படையணி பயிற்சிப் பாடசாலையின் பணி நிலை சாஜன் எம்எம் அமரதாச அவர்களால் வரைபடத்தைக் கையாளும் திறனை மேம்படுத்தல் தொடர்பான விரிவுரை நடத்தப்பட்டது. இந்த விரிவுரையில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 124 படையினர் கலந்துகொண்டனர்.