Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2021 17:00:16 Hours

23 வது இலேசாயுத காலாட் படையினரின் சொந்த வளங்களில் நோயாளர்களுக்கு மருத்து உபகரணங்கள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் 592 வது பிரிகேடின் 23 வது இலேசாயுத காலாட் படை அண்மையில் பரிதாகரமான நிலையிலிருக்கும் இரு வறிய குடும்பங்களுக்கு அவர்களது சுகாதார தேவைகளுக்கு அவசியமான பொருட்களை பெற்றுக்கொடுத்தனர்.

அதற்கமைய உடல் வலுவற்ற நிலையில் இயலாமையுடன் வாழ்ந்துவரும் திருமதி பார்த்தீபன் சிந்துராஜா அவர்களுக்கு சக்கர நாட்காலியும், கடுமையாக நோய்வாய்பட்டிருக்கும் அவரது குழந்தையின் காயங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் காற்றோட்டமான பகுதிகளில் பயன்படுத்தகூடியவாறு காற்று நிரப்புக்கூடிய மெத்தைஎன்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

23 வது இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பிபிஎஸ் வீரசூரிய, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் ஒன்றிணைந்து மனிதாபிமான அடிப்படையில் அந்த இரண்டு மருத்துவ உபகரணங்களை படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு வீட்டுத் திட்டங்களுக்கு மத்தியில் மனிதாபிமான அடிப்படையில் மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

59 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிடி சூரியபண்டார மற்றும் 592 வது பிரிகேட் தளபதி கேணல் சமிந்த ஆராச்சிகே ஆகியோர் திட்டத்திற்கான வழிகாட்டல்களை வழங்கினர்.