Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th July 2021 17:00:42 Hours

223 வது பிரிகேட் படையினர் வைத்தியசாலைநோயாளிகளுக்கு இரத்த தானம்

திருகோணமலை பிராந்திய இரத்த மாற்று சிகிச்சை வைத்திய ஆலோசகர் வைத்தியர் எம்.பி. உதேனி விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, 223 வது பிரிகேட் படையினர் மற்றும் 6 வது இலங்கை கவச வாகனப் படையினர் திருகோணமலை வைத்தியசாலையின் நோயாளிகளின் நலனுக்காக பன்குளம் 6 வது இலங்கை கவச வாகனப் படை தலைமையகத்தில் இரத்த தானம் செய்தனர்.

22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹரே மற்றும் 223 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சனத் பெரேரா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியாவின் ஆசியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.