Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2022 13:05:34 Hours

223 வது பிரிகேட் படையினரால் 5 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது

7 வது இராணுவ புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், 22 வது படைப்பிரிவின் 223 வது பிரிகேட் தலைமையகத்தில் உள்ள இராணுவ புலனாய்வுப் படையினர் சர்தாபுர விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து, 5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளுடன் (ஐஸ்) ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (9) கிண்ணியா பகுதியில் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருளுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத்தலைமையக தளபதி, 22 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 223 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.