Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2021 17:20:16 Hours

222 வது பிரிகேடின் 22 வது விஜயபாகு படையினரால் வாழ்வாதாரத்திற்கான உதவிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவசியமான வகையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது படைப்பிரின் கீழுள்ள 222 வது பிரிகேடின் 22 வது விஜயபாகு காலாட் படையினரால் சனிக்கிழமை (07) ஒரு குடும்பத்திற்கு இரண்டு வீதம் என்ற அடிப்படையில் கால்நடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி பெறுமதியான திட்டம் 22 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவஹாரே மற்றும் 222 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.ஜி.டபிள்யூ விமலசேன ஆகியோரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.

சேருநுவர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் போது 22 வது விஜயபாகு காலாட் படையின் அதிகாரிகள், சிப்பாய்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன் திரு. ஜீஎம்எஸ் ஏக்கநாயக்க என்பவரின் குடும்பத்திற்கு இரண்டு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டன.