21st January 2025 14:20:11 Hours
221 வது காலாட் பிரிகேட் படையினரால், திருகோணமலை, சாகரபுரம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு அத்தியாவசிய பாட புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் 2025 ஜனவரி 16 அன்று வழங்கப்பட்டது.
221 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, மாணவர்களின் கல்வியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டதுடன், கற்றலை மேலும் மேம்படுத்துவதற்காக பாடசாலை நூலகத்திற்கு சிறப்பு புத்தகத் தொகையும் நன்கொடையாக வழங்கப்பட்டது.