26th May 2024 16:08:09 Hours
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் கருத்து மற்றும் நிதி ஒருங்கிணைப்பின் மூலம் கோமரங்கடவல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பக்மீகம கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த திரு.ரஞ்சித் பியரத்னவுக்கான புதிய வீட்டைக் கட்டும் பணியை 22 வது காலாட் படைப்பிரிவு ஆரம்பித்தது.
223 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 6 வது இலங்கை கவச வாகனப் படையணி தேவையான மனிதவளத்தை வழங்கும்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் பங்குபற்றலுடன் 223 வது காலாட் பிரிகேட் தளபதி 6 வது இலங்கை கவச வாகனப் படையணி கட்டளை அதிகாரி முன்னிலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2024 மே 22 அன்று நடைபெற்றது.
இதற்கான அனுசரணையை திரு. துருவி பெரேரா அவர்கள் வழங்கினார். மூன்று மாதங்களில் வீட்டின் நிர்மாணப்பணிகளை முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது. உதவி பிரதேச செயலாளர் கோமரங்கடவல, கோமரங்கடவல நகர சபை செயலாளர், பக்மீகம கிராம சேவை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 6 வது இலங்கை கவச வாகனப் படையணி சிப்பாய்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.