Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th February 2024 17:28:41 Hours

22 வது காலாட் படைப்பிரிவில் போர் இலக்கியம் மற்றும் வீரத்தின் சாராம்சம் பற்றிய விரிவுரை

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 பெப்ரவரி 15 ஆம் திகதி 22 வது காலாட் படைப்பிரிவில் ‘இலங்கை இராணுவ போர் இலக்கியம்’ மற்றும் ‘வீர பாதுகாவலன்’ என்ற தலைப்பில் விரிவுரை நடைபெற்றது.

ரணவிருவா இதழின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் ஈ.ஏ.ஏ.எஸ் சாமிந்த அவர்கள் இராணுவ இலக்கியம் பற்றிய கவரக்கூடிய நுண்ணறிவுகளுடன் மதிப்புமிக்க போர்க்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில், லெப்டினன் கேணல் டிபீஜீகேபீ டி அல்விஸ் ஆர்டபிளயூபீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 'வீர பாதுகாவலரை' வரையறுக்கும் பண்புகளை எடுத்துக் காட்டினார்.

22 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை படையலகுகளின் 250 படையினரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.