26th August 2024 19:28:50 Hours
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது, 22 காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகளுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புணரமைப்பு பணிகள் 18 ஜூன் 2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் இரண்டு மாதங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதுடன் புதுப்பிக்கப்பட்ட அதிகாரிகள் தங்குமிடம் 26 ஆகஸ்ட் 2024 அன்று படைப்பிரிவு தளபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த வசதி 20 அதிகாரிகளுக்கு தங்குமிட வசதி மற்றும் இரண்டு முழுமையான வசதிகளுடன் கூடிய விருந்தினர் அறைகளை உள்ளடக்கியது. நிகழ்வின் போது, புனரமைப்பு பணிகளுக்கு பங்களித்த பொறியியல் சேவைகள் படையணி மற்றும் கட்டளை படையலகுகளின் படையினரின் சேவைக்கு தளபதி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.