Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2023 21:48:48 Hours

22 வது காலாட் படைப்பிரிவின் கரப்பந்து கிண்ண 2023 போட்டிகள்

22 வது காலாட் படைபிரிவு கரப்பந்து சவால் கிண்ணம் - 2023 இன் இறுதிப் போட்டிகள் கந்தளாய், சீனிபுர இலங்கை பீரங்கி படையணி கரப்பந்து மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 10) ஆரம்பமானது.

இறுதி பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக 22 வது காலாட் படைபிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் கலந்து கொண்டார்.

22 வது காலாட் படைப்பிரிவின் 221, 222 வது மற்றும் 223 வது காலாட் பிரிகேட்களின் 6 வது இலங்கை கவச வாகன படையணி, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 20 வது கஜபா படையணி, 9 வது விஜயபாகு காலாட் படையணிகளை உள்ளடக்கிய கரப்பந்து அணிகள் 3 நாட்கள் போட்டிகளில் விளையாடின.

இறுதியாக, 5 வது (தொ) இலங்கை பீரங்கிப் படையணி வீரர்கள் 22 காலாட் படைபிரிவு கரப்பந்து சம்பியன்ஷிப் கிண்ணம் - 2023 இன் சம்பியன்ஷிப்பை 3-2 என்ற கணக்கில் 6 வது இலங்கை கவச வாகன படையணியை தோற்கடித்து வென்றனர்.

இப்போட்டியின் இறுதிப் போட்டிகளை 22 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி பிரிகேடியர் கே.கே.எஸ் பெரகும் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 222 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்.எஸ்.எஸ் டயஸ் ஆர்எஸ்பீ மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் போட்டியை கண்டுகளித்தனர்.