14th May 2024 21:49:04 Hours
5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட 22 வது காலாட் படைப்பிரிவு தளபதி சவால் கிண்ண கரப்பந்தாட்ட போட்டி 2024 மே 7 முதல் 9 வரை நடைபெற்றதுடன் இறுதி போட்டி 11 மே 2024 அன்று கந்தளாய் சீனிபுர இலங்கை பீரங்கி படையணி கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
22 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை பிரிகேட் மற்றும் படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் போட்டியிட்டன. இறுதியில், 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
22 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப்போட்டி தொடரில் பங்குபற்றினர்.