Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th April 2024 13:57:13 Hours

22 வது காலாட் படைப்பிரிவின் எல்லே போட்டியில் 6 வது கவச வாகன படையணி வெற்றி

22 வது காலாட் படைப்பிரிவு, படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2024 மார்ச் 27 முதல் 30 வரை ‘படைப்பிரிவு தளபதி சவால் கிண்ணம் எல்லே – 2024’யை நாடாத்தியது. இந்த போட்டியில் கட்டளை பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் 10 அணிகள் பங்குபற்றின.

10 பூர்வாங்க போட்டிகளின் பின்னர் 6 வது கவச வாகன படையணி, மற்றும் 5 வது இலங்கை பீரங்கி படையணி அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்கள் கலந்து சிறப்பித்தார். மொல்லிப்பொத்தானை ஹமீடியா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 6 வது கவச வாகன படையணி அணி சம்பியனாகத் தெரிவானது.

இப் போட்டியில் 22 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.