17th January 2024 19:30:24 Hours
தேவையுடைய குடும்பங்களுக்கு ஆதரவை வழங்கும் திட்டத்தின் கீழ் 221, 222, மற்றும் 223 வது காலாட் பிரிகேட் பிரதேசத்தில் மூன்று வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனவரி 11, 12 மற்றும் 15 ஆகிய திகதிகளில் தனித்தனி நிகழ்வுகளாக இடம்பெற்றன. இத்திட்டம் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் தல்கஸ்வெவ, அக்போபுரவில் வறிய குடும்பத்தில் வசிக்கும் திரு. ஆர்.எம். ரஞ்சித் வசந்த பண்டார அவர்களிற்கான வீட்டை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் திரு அனுராத கொத்தலாவல அவர்களின் நிதி அனுசரணையுடன் 2024 ஜனவரி 11 ம் திகதியன்று இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜனவரி 12 ம் திகதி, 6 வது இலங்கை கவசப் வாகன படையணியின் படையினர் இதேபோன்ற திட்டத்தை மொரவெவ பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தின் திரு. ஜீஆர் சமிந்த குமார அவர்களுக்கு திரு.யூ அனுராத கொத்தலாவல அவர்களின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய ஜனவரி 15 ம் திகதியன்று 20 வது கஜபா படையணியின் படையினரால், ஸ்ரீபுராவில் வசிக்கும் திரு. கே. உபுல்பிரியந்த அவர்களுக்கு திரு. இசுரு பிரபாத் குமார அவர்களின் நிதி ஆதரவுடன் வீடு ஒன்றை நிர்மாணிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிற்குமான மொத்த செலவு ரூ. 1.35 மில்லியன் ஆகும். இம் மூன்று வீடுகளும் மூன்று மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்படும்.