Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd November 2024 18:00:58 Hours

22 வது காலாட் படைப்பிரிவினால் அனர்த்த நடவடிக்கை பயிற்சி பட்டறை

22 வது காலாட் படைப்பிரிவு அதன் தலைமையகத்தில் 2024 ஒக்டோபர் 28 முதல் 30 ஆகிய திகதிகளில் அனர்த்த நடவடிக்கை பயிற்சி பட்டறையை நடாத்தியது. மேஜர் ஜெனரல் யு.கே.டி.டி.பீ. உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இச்செயலமர்வில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 7 அதிகாரிகள் மற்றும் 131 சிப்பாய்கள் பங்குபற்றினர்.

கம்பளை இலங்கை இராணுவ அனர்த்த நடவடிக்கை பயிற்சி நிலையம், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணியாளர்களின் அனர்த்த நடவடிக்கை திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது. அனர்த்த சூழ்நிலைகளை திறம்பட நிர்வகிப்பதில் தங்கள் திறமைகளை வலுப்படுத்த பங்கேற்பாளர்கள் நடைமுறை பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.