23rd October 2024 15:23:02 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி 2024 ஒக்டோபர் 17 தொடக்கம் 19ம் திகதி வரை 22 வது காலாட் படைப்பிரிவில் நடைபெற்றது.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த 26 மாற்றுத்திறனாளிகளுக்கு 27 செயற்கை உடல் உறுப்புகள் வழங்கப்பட்டன. கொழும்பு பிரண்ட்-இன்-நீட் சொசைட்டி, ரோட்டரி கிளப் ஒப், கேபிட்டல் சிட்டி மற்றும் லங்கா அசோக் லேலண்ட் ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கின.
இந் நிகழ்வில் உதவி அமைப்புகளின் பிரதிநிதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.