Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2023 19:00:02 Hours

22 வது காலாட் படைபிரிவின் படையினரால் நிலாவெளி கரையோரப் பகுதியில் சிரமதான பணி

கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 22 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, 221 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் அறிவுறுத்தலின் ,221 காலாட் பிரிகேட் படையினரால் திருகோணமலை நிலாவெளி கடற்கரை பகுதி வியாழக்கிழமை (4) சுத்தம் செய்யப்பட்டது.

கடற்படை, பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் ஏனைய அரச ஊழியர்களுடன் 17 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இத் திட்டத்தில் கலந்து கொண்டனர்.