Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2023 21:11:01 Hours

22 காலாட் படைப்பிரிவு சிப்பாய்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சிறை வாழ்க்கை பற்றிய செயலமர்வு

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் திருகோணமலையில் 22 வது காலாட் படைப்பிரிவு படையினரின் ஏற்பாட்டில் அனுமதியற்ற இடங்கள் என்ற கருப்பொருளில் அப்பகுதி பாடசாலை மாணவர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன், ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டால், அனுபவிக்க வேண்டிய முக்கியமான மற்றும் கடுமையான வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது.

கந்தளாய் நகர சபையில் மண்டபத்தில் புதன்கிழமை (ஜூலை 05) காலை கந்தளாய் மத்திய கல்லூரி, அக்ரபோதி தேசிய பாடசாலை மற்றும் கந்தளாய் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், 22 வது காலாட் படைப்பிரிவு, அதன் கீழ் உள்ள காலாட் பிரிகேட் படையலகுகளின் 20 அதிகாரிகள் மற்றும் 350 சிப்பாய்கள் விரிவுரையைக் கேட்டனர்.

இரண்டு அமர்வுகளும் சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் சந்தன வீரசிங்கவினால் நடாத்தப்பட்டது. மற்றும் உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் (புனர்வாழ்வு) திரு ஜயந்த சமன் அத்தசூரிய இளம் தலைமுறையினரை சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து தடுக்கும் நோக்கத்துடன். சொற்பொழிவின் போது சிறை வாழ்க்கை குறித்து நன்றாக விளக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் எண்ணக்கருக்கமைய 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீஎம்என் பெரோரா ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு 222 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்எஸ்எஸ் டயஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடுசெய்யப்பட்டது. 5 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி டப்ளியு டப்ளியு எம் பீ பி வேகடபொல யுஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந் நிகழ்வுகளை மேற்பார்வையிட்டார்.