Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th August 2021 16:07:11 Hours

22 வது படைப் பிரிவின் புதிய படைத் தளபதி கட்டளை அலகுகளுக்கு விஜயம்

22 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹார, அண்மையில் 221, 222 வது மற்றும் 223 வது பிரிகேடுகளுக்கும் 6 வது இலங்கை கவசப் படையணி, 15 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி, 22 வது விஜயபாகு காலாட்படையணி, 5 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி, 2 வது (தொ) கஜபா படையணி மற்றும் 17 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

தலைமையங்களுக்கு வருகை தந்த தளபதி பிரிகேட் தளபதிகளால் வரவேற்கப்பட்டதுடன், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் கம்பனி தளபதிகளால் பிரிவுகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் அவர் தாவுல்வெவயில் அமைந்துள்ள ஆட்சேர்ப்பு பயிற்சிப் கல்லூரிக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்த்துடன் பயிற்சி கல்லூரின் வளாகத்தின் வசதிகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.