10th March 2024 10:50:05 Hours
22 வது காலாட் படைப்பிரிவு 2024 மார்ச் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திரு.தமிந்த பிரியதர்ஷன மற்றும் அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் சேருவில மங்கல ரஜமஹா விஹாரை தர்ம பாடசாலையின் 350 மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கியது.
இந்த நிகழ்ச்சி 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம். பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 222 வது காலாட் பிரிகேட் மற்றும் 9 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.