23rd June 2023 19:50:37 Hours
திருகோணமலை மாநகர சபைக்குட்பட்ட கன்னியாவில் குப்பை கொட்டும் இடத்தில் வியாழக்கிழமை (ஜூன் 22) மாலை 0430 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 22 வது காலாட் படைப்பிரிவின் படையினர் கடற்படை, பொலிஸ், தீயணைப்பு படை மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கூட்டு முயற்சியால் தீ அணைக்கப்பட்டது.
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 221 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 22 வது காலாட் படைப்பிரிவினர் மற்றும் 2 வது கஜபா படையணியின் படையினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சுமார் இரண்டு ஹெக்டேயர் குப்பை கொட்டும் இடம் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை தீயணைப்பு பிரிவுக்கு சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க படையினருக்கு உதவினர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.