Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2021 20:30:14 Hours

22 மற்றும் 23 வது படைப்பிரிவுகளில் சேதன பசளை பயன்பாடு தொடர்பிலான மாநாடு

பசுமை விவசாய எண்ணக்கருவை ஊக்குவிக்கும் வகையில் 22 வது படைப்பிரிவின் தளபதி, மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே, 221 மற்றும் 223 வது பிரிகேட் தளபதிகள், 22 வது படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, 22 வது படைப்பிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் வழங்கல், 22 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி, 6 வது இலங்கை கவச வாகனப் படையணி, 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படை, 15 வது விஜயபாகு காலாட் படை, 5 வது இலங்கை (தொ) பீரங்கி படையணி, 2 (தொ) கஜபா படையணி மற்றும் 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள் மற்றும் திருகோணமலை விவசாய பணிப்பாளர், திருகோணமலை பிரதி விவசாய பணிப்பாளர், லக் பொஹொர நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் ஆகிய தரப்பினரின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (13) 22 வது படைப்பிரிவு தலைமையகத்தில் சேதன பசளை பாவனையை ஊக்குவிப்பது தொடர்பிலான மாநாடு இடம்பெற்றது.

மாநாட்டின் போது, குறைபாடுகள், சவால்கள், அரசாங்க அதிகாரிகளுடன் அறிவைப் பகிர்ந்துகொள்ளல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொடர்பில் விவாத அடிப்படையிலான கலந்தாலோசிப்பொன்றும் இடம்பெற்றது.

இதேவேளை, பசுமை விவசாயம் மற்றும் சேதன பசளை செயன்முறை தொடர்பான விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (16) 23 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

மேற்படி அமர்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதன பசளை உற்பத்தி பாவனை தொடர்பிலான சாத்தியகூறுகளை ஆய்வு செய்யும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.