14th August 2020 15:16:32 Hours
திருகோணமலையில் அமைந்துள்ள 22 ஆவது படைப் பிரிவிற்கு மருத்துவமனை அதிகாரிகளின் வேண்டுகோளின் பிரகாரம் குச்சவெலி மற்றும் பங்குளம் வைத்தியசாலைகளில் இம் மாதம் (15) ஆம் திகதி படையினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 221 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரியந்த காரியவஷம் மற்றும் 223 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சாந்த பெரேரா அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
குச்சவெலி, பங்குளம் வைத்தியசாலை வளாகங்களில் 6 ஆவது படைக்கலச் சிறப்பணி, 6 ஆவது விஜயபாகு காலாட் படையணியினரால் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் நிமித்தம் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov