Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22ஆவது படைப் பிரிவு மற்றும் லக் கலண கழகம் இணைந்து நடாத்திய கண் பரிசோதனை நடமாடும் சேவை

திருகோணமலை விஜயராமை விகாரையில் 22ஆவது படைப் பிரிவினர் , பொலிசார் மற்றும் லக் கலண கழகம் இணைந்து கடந்த சனிக் கிழமை (09) நடாத்திய கண் பரிசோதனைக்கான நடமாடும் சேவையின் மூலம் இப் பிரதேச மக்களுக்கு 300 மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இலங்கை கண் தான மைய மருத்துவக் குழாமின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண் பரிசோதனைக்கான நடமாடும் சேவையின் மூலம் கிட்டத் தட்ட 460ற்கு மேற்பட்ட பொது மக்கள் கண்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிகழ்விற்கான ஒழுங்குகள் 22ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் எதிர் வரும் திங்கட் கிழமை (18)உலக கண் பார்வைத் தினத்தை முன்னிட்டு கொழும்பு கண் தான மையத்தின் ஒத்துழைப்போடு இந் நிகழ்வுகள் வெற்றிகரமாக இடம் பெற்றன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 221ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் கே பி எஸ் பிரேமலால் மற்றும் ஓய்வு பெற்ற பிராந்திய பொலிஸ் அதிகாரி ஆர் எம் என் ஜி பெரேரா, லக் கலண கழகத்தின் தலைவரான திரு சுகத் பிரசாந்த மற்றும் இக் கழகத்தின் உயர் அதிகாரிகள் அத்துடன் பல இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Best Authentic Sneakers | adidas Campus 80s South Park Towelie - GZ9177