Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2025 11:40:57 Hours

213 வது காலாட் பிரிகேடினால் சமூக நலத்திட்டம் ஏற்பாடு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி. பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்எஸ்சிகே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், செட்டிகுளம், முகத்தான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2025 ஜனவரி 11 ஆம் திகதி கண் மற்றும் மருத்துவ பரிசோதனைத் திட்டம் நடாத்தப்பட்டது.

ஹெல்ப் ஏஜ் ஸ்ரீலங்காவுடன் இணைந்து, கொழும்பு ரோயல் கல்லூரியின் 70 வது குழுவினால் வழங்கப்பட்ட நிதியுதவியில் இந்த முயற்சி, நேரியகுளம், அடியா புலியங்குளம், மருதமடு மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியது. மேலும், 120 உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஆடைகள் விநியோகிக்கப்பட்டதுடன், மூன்று உள்ளூர் பாடசாலைகளின் கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

213 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பீஎம் டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 2 வது இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.