14th November 2023 22:35:53 Hours
21 வது காலாட் படைப்பிரிவின் 213 வது காலாட் பிரிகேட் படையினர் உடைப்பெடுத்த தாவரக்குளம் குளக்கட்டினை சீர்திருத்தும் பணிகளில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) ஈடுபட்டனர்.
தொடர் மழை காரணமாக குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து குளக்கட்டு உடைப்பெடுத்ததை தொடர்ந்து கிராம மக்கள் இராணுவத்தினரின் உதவியை நாடியதை தொடர்ந்து இப் பணி மேற்கொள்ளப்பட்டது.
21 வது காலாட் படைப்பிரிவு தளபதி, 213 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்தத்தைத் தடுக்கும் நிமித்தம் படையினரால் இப் பணிகள் உடனடியாகச் முன்னெடுக்கப்பட்டன.
213 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எம்.கே.டி.பீ மாபலகம பீஎஸ்சீ, 2வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.எம்.கே.பி ரத்நாயக்க ஆர்எஸ்பீ மற்றும் அதிகாரி ஒருவருடன் 30 சிப்பாய்கள் இப் பணியை முன்னெடுத்தனர்.
ஆசிகுளம் பகுதியில் உள்ள கிராம மக்கள் இராணுவத்தினரின் பணியை பாராட்டினர்.