18th February 2025 13:46:17 Hours
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையில் 212 வது காலாட் பிரிகேட் படையினரால் 2025 பெப்ரவரி 17, அன்று “தூய இலங்கை திட்டத்திற்கமைய தூய்மைபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரிகேடியர் பிஏஎம்பீ பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையில், புனித நகரமான அனுராதபுரம் (அட்டமஸ்தான), திசா குளம் மற்றும் பசவக்குளம் குளக்கட்டுகளிலிருந்து பிளாஸ்டிக், பொலிதீன் மற்றும் கண்ணாடி உள்ளிட்ட உக்காத கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
212 ,213 வது காலாட் பிரிகேட்கள் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை சேர்ந்த சுமார் 300 படையினர் இந்த திட்டத்தில் பங்கேற்றனர்.