09th February 2025 18:51:30 Hours
77 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 212 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பி.ஏ.எம்.பீ. பாலசூரிய ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கெக்கிராவ, கிரி மெட்டியாவ காமினி வித்தியாலயத்தில், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை பைகள், காலணிகள், புத்தகங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி 2025 பெப்ரவரி 04 அன்று நடைபெற்றது.
32 மாணவர்கள் இந்த நன்கொடையினால் பயனடைந்தனர், இந்த நன்கொடைக்கு தேவையான நிதி உதவியை திரு. ஜகத் குமார அவர்கள் வழங்கினார்.
7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணியினால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு, அனைத்து மாணவர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.