Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th May 2023 22:25:30 Hours

211 வது காலாட் பிரிகேட் படையினரால் மதவாச்சி மக்களுக்கு உதவி

வெசாக் பண்டிகையை முன்னிட்டு 211 வது காலாட் பிரிகேட் படையினர் , மதவாச்சி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வறியவர்களின் முன்னேற்றத்திற்காக உதவி வழங்கும் நிமித்தம் குறைந்த வருமானம் பெறும் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை சனிக்கிழமை (6) வழங்கினர்.

27 வது ‘மனிதகுலத்தின் நிவாரணக் கப்பல்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, திரு.பிரசாத் லொகுபாலசூரிய அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த நலன்புரி திட்டம், திரு. உமேஷ் குணசேகர, திருமதி. மதுரி குணசேகர மற்றும் திருமதி. ஹர்ஷனி குணசேகர ஆகியோர் இணைந்து அனுசரணை வழங்கினர்.

இத் திட்டத்திற்கு பிரதம அதிதியாக 21 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ விஎஸ்வீ யுஎஸ்பீ என்டீயூ, மதவாச்சி பிரதேச செயலாளர் திருமதி எம்சி மளவியாராச்சி, வர்த்தகர் திரு. உமேஷ் குணசேகர மற்றும் ஏனைய நன்கொடையாளர்கள், சிவில் அலுவல்கள் அதிகாரி. 211 வது காலாட் பிரிகேட்டின் அதிகாரிகள் மற்றும் 14 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினர் இந்த விநியோக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.