20th August 2023 20:36:52 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது காலாட் படைப்பிரிவின் 211 வது காலாட் பிரிகேட் படையினரால் மக்கள் வங்கி பௌத்த சங்கத்தின் அனுசரணையுடன், பதவிய கூடரத்மலே வித்தியாலயம், வெலிஓயா ஜனகபுர வித்தியாலயம் மற்றும் ஹலபவெவ வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் 132 மாணவர்களுக்கு ஓகஸ்ட் 15 ஆம் திகதி அந்தந்த பாடசாலை உபகரணங்களைைவழங்கியது.
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு மக்கள் வங்கியின் பதவிய கிளை நிதியுதவியை வழங்கியது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐஎன் கதனாரச்சி ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டதுடன், 211 வது காலாட் பிரிகேட் தளபதியின் பணிப்புரையின் பேரில் 211 ஆவது காலாட்படை பிரிகேடின் 9 வது கஜபா படையணி மற்றும் 5 (தொ) கஜபா படையணியின் படையினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் 9 வது கஜபா படையணி, 5 (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மக்கள் வங்கியின் அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.