04th May 2023 19:25:11 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது காலாட் படைப்பிரிவின் 211 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையினர்களின் கூட்டு அனுசரணையின் மூலம், மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு மதவச்சி பிரதேசத்தில் வீடு நிர்மாணிகப்பட்டது. இத்தாய் ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படை பொறியியலாளர் திரு. எம்எஸ் அபேவிக்ரம, கொழும்பு-7 றோயல் கல்லூரியின் அதிபர் மற்றும் ஊழியர்கள் மற்றும் மதவச்சி கத்தோலிக்க தேவாலயத்தின் மதகுருமார்கள் ஆகியோரால் வழங்கப்பட்ட 3.5 மில்லியன் ரூபா பெறுமதியான கூட்டு அனுசரணையில் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டது.
இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க மதவச்சி பிரதேச செயலகத்தினால் 20 பேர்ச்சஸ் காணி இந்த சமூக நலத் திட்டத்திற்காக ஒதுக்கியதுடன், றோயல் கல்லூரி ஊழியர்கள், 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்கள் முழு அனுசரணையையும் ஒருங்கிணைத்தார்.
படையினர் அவர்களின் கஷ்ட வாழ்க்கை நிலைமைகளையும் அவதானித்த போது திருமதி எம்எல் தரங்கா சந்தமாலி, மூன்று பிள்ளைகளின் விதவைத் தாயான இவர், சரியான தங்குமிட வசதியின்றி ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
கிராமசேவை அதிகாரியின் சிபாரிசுக்கு அமைய, வீடொன்றை நிர்மாணிப்பதாக படையினர் உறுதியளித்ததையடுத்து, நிர்மாணப்பணிகளுக்காக 20 பேர்ச் காணியை மதவச்சி பிரதேச செயலகம் வழங்கியது.
செவ்வாய்கிழமை (மே 2) அன்று, மதவச்சி கத்தோலிக்க தேவாலய பாதிரியார் கலந்துகொண்ட சுருக்கமான வைபவத்தின் போது, புதிய வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
அனுராதபுரம் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சந்தியா அபேசேகர, 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏஎம்சிபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, நன்கொடையாளர் திரு. எம்எஸ் அபேவிக்ரம, கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் திரு. ஆர்எம்எம் ரத்நாயக்க, மதவச்சி பிரதேச செயலாளர் திருமதி. எம்சி மளவியாராச்சி, 211 வது காலாட் பிரிகேட் சிவில் அலுவல்கள் அதிகாரி, 2 வது விஜயபாகு காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.