Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

211 வது பிரிகேட் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளியிடம் ஒப்படைப்பு

மதவாச்சி பிரதேச செயலகத்தின் நிதியுதவியுடன் இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு மதவாச்சி அங்குநொச்சிய திருமதி ஆர் குமுதுனி ஸ்ரீயானி ரத்னபால என்ற வரிய குடும்பத்திற்கு 20 ஜூன் 2022 அன்று எளிமையான நிகழ்வில் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் 21 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் நிஷ்ஷங்க எரியகம மற்றும் 211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்களும் கலந்து கொண்டனர்.

211 வது பிரிகேட் தளபதியின் பணிப்புரையின் பிரகாரம் 2 வது (தொ) விஜயபாகு காலாட்படை படையணி படையினர்கள் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் இந்த புதிய வீட்டை நிர்மாணித்தனர்.

மதவாச்சிய பிரதேச செயலக அலுவலகத்தில் திருமதி எம்.சி.மல்லவாராச்சி திட்டத்திற்கான நிதியை ஒருங்கிணைத்தார்.

211 வது பிரிகேட் தளபதி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அரச அதிகாரிகளுடன் வீடு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

2 வது பொறியியளாலர் சேவை படையணி இத்திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தை வழங்கியது.