Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2022 15:14:05 Hours

211 வது பிரிகேடினர் பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கல்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21 வது படைப்பிரிவின் 211 வது பிரிகேடினரால் 73 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (7) மதவாச்சி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள தொலைதூர மடலாயங்கள் மற்றும் விகாரைகளில் வசிக்கும் 100 பௌத்த பிக்குகளுக்கு 'சாங்கிக தானம்' (தானம்) வழங்கப்பட்டது.

211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜேரத்ன அவர்களின் வழிகாட்டுதலின்படி, படையினர் மெதவாச்சி, இசின்பெஸ்ஸகல ராஜ மகா விகாரையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர். நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வட மத்திய மாகாணத்தில் உள்ள தொலைதூரப் பகுதிகளில் உள்ள பல மடாலய துறவிகள் தங்கள் ‘சிவுபாச’ (துறவறத்திற்கான இன்றியமையாதவை) பெறுவதில் சிரமப்படுவருகின்றனர்.

சிங்கப்பூர் நாட்டு தொழிலதிபர் திரு சீ வோங் சியுடன் இணைந்து 'சரண பௌத்த அறக்கட்டளையின்' திரு சுனில் விஜேவர்தன அவர்களினால் இத்திட்டத்திற்கான அனுசரணை வழங்கப்பட்டது.

படையினர் அனைத்து பௌத்த பிக்குகளையும் ஒரு ஊர்வலமாக தர்மசாலைக்கு அழைத்துச் சென்றதினை தொடர்ந்து அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அமைப்பாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்குவதற்கு முன்னர், தலைமை பிக்கு ஒருவரால் வழங்கப்பட்ட ‘அனுஷாசனம்’ உரையில் 211 வது பிரிகேட் படையினரின் முன்முயற்சி மற்றும் ஏற்பாடுகள் பாராட்டப்பட்டது.

அன்னதானத்தின் முடிவில், அனுசரணையாளர்களின் பெருந்தன்மையால் ஒவ்வொரு துறவிக்கும் ‘பிரிகர’ (துறவிகளுக்கான காணிக்கை) உடன் ரூபாய் 10,000/= வழங்கப்பட்டது. 211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜேரத்ன, அனுசரணையாளர்களுடன் இணைந்து மாபெரும் ‘பிங்கமா’வில் பங்குபற்றினார்.

14 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.எஸ்.ஜி.பி.எஸ் அமரசேன அவர்கள், 2 வது (தொ) விஜயபாகு காலாட்படையணி சிவில் விவகர அதிகாரி, 211 வது பிரிகேட் அதிகாரிகள் மற்றும் 211 வது பிரிகேட் படையினர் இந் நிகழ்வின் வெற்றிக்காக தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்