11th May 2023 19:15:47 Hours
வரையறுக்கப்பட்ட எக்ரோ சர்வதேச தனியார் நிறுவனம் மற்றும் செல்வி. ரோஸி டூரிங் என்ற அனுசரனையாளர்களின் அனுசரணையுடன் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21 வது காலாட் படைப்பிரிவின் 211 வது காலாட் பிரிகேட் படையினர், அநுராதபுரம் மதவச்சி கராபிக்கட தம்மதீப ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் 48 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் பாடசாலை பைகளை செவ்வாய்க்கிழமை (9) வழங்கினர்.
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏஎம்சிபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, மதவச்சி மேலதிக பிரதேச செயலாளர் திரு, கௌசிகன், 14 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஜிஎஸ்பீ அமரசேன மற்றும் 211 வது காலாட் பிரிகேட் சிவில் அலுவல்கள் அதிகாரி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.