03rd January 2020 14:45:36 Hours
2020ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு 211ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் லாள் விஜேதுங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய மற்றும் 21ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபத்திரன அவர்களின் ஆசிர்வாதத்துடன் 211ஆவது படைத் தலைமையகத்தின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்வானது 2019 டிசம்பர் 31ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த இசை நிகழ்வானது சிங்கள, தழிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முகமாக வன்னிப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மதவாச்சி சிபி மைதானத்தில் இடம்பெற்ற இவ் மாலை இன்னிசை நிகழ்விற்கு மதவாச்சி வணிக அமைப்பினால் அனுசரணை வழங்கப்பட்டது.
அனுராதபுரம்,வவுனியா,மதவாச்சி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள மக்கள் இவ் இன்னிசை நிகழ்வினை இரவு முழுவதும் கண்டு களித்தனர்.மேலும் இந்நிகழ்வை இலவசமாக பார்வையிடுவதற்கு இராணுவமானது அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
இந்த இன்னிசை இரவு நிகழ்வின் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி ndu psc அவர்கள் கலந்து கொண்டார்.
54ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சுபாஷன வெலிகல, 211ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத் தளபதி பிரிகேடியர் லாள் விஜேதுங்க, 212ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத் தளபதி கேணல் அணில் பீரிஸ், 213ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத் தளபதி கேணல் ரசிக்க குமார,சிரேஷ்ட அதிகாரிகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள், அனுராதபுர,மதவாச்சிமற்றும் வவுனியா பொலிஸ் உத்தியோகத்தர்கள், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள படையினர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். jordan release date | Nike Dunk - Collection - Sb-roscoff