27th October 2024 13:55:55 Hours
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இதய நுரையீரல் புத்துயிர்ப்பு பற்றிய விரிவுரை 23 ஒக்டோபர் 2024 அன்று 21 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விரிவுரையானது அவசரகால மாரடைப்பு சூழ்நிலைகளின் போது உயிர்காக்கும் நடைமுறைகள் குறித்து இராணுவ வீரர்களுக்கு கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழு, மயக்கவியல் நிபுணர் வைத்தியர் விஷாக கெர்னர் (எம்பிபிஎஸ், எம்டி, எப்ஆர்சீஏ, எம்ஆர்ஈஎஸ்) மற்றும் வைத்தியர் லெவன் காரியவசம் (எம்பிபிஎஸ், எம்டி) ஆகியோர் தலைமையில் இந்த விரிவுரை நடாத்தப்பட்டது.
21 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 212 வது காலாட் பிரிகேட்டை சேர்ந்த 20 அதிகாரிகளும் 150 சிப்பாய்கள் இந்த பயிற்சி விரிவுரையில் கலந்துகொண்டனர்.