31st December 2021 11:07:29 Hours
21 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நுகேகொடையைச் சேர்ந்த திரு சாமர தர்ஷன விஜேசிங்க அவர்கள் தலைமையில் நன்கொடையாளர்கள் அனுராதபுரம் கதுருப்பிட்டிய அசோகமலா வித்தியாலயத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 103 மாணவர்களுக்கு டிசம்பர் 17 இலவச பாடசாலை உபகரணங்களை வழங்கினர்.
இராணுவ முன்னோக்கிய மூலோபாய திட்டம் 2020-2025' உடன் இணைந்த சமூக உதவித் திட்டம், பொருளாதாரக் கஷ்டங்கள் மத்தியில் படிப்பிற்குத் தடையாக இருக்கும் இந்தத் கஷ்டப் பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில். 213 வது பிரிகேட் தளபதி கேணல் எல்.ஜி.ஜே.என் ஆரியதிலக்க அவர்களின் ஆதரவுடன் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.டி ரத்னசிறி ஆகியோர் பெற்றோருடன் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
பிரதம அதிதியாக 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க கலந்துக் கொண்டனர். பிரிகேட் தளபதிகள் மற்றும் படையலகுகளின் தளபதிகளுடன் இணைந்து விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் மூன்று நன்கொடையாளர்கள், அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சில்பஷோக ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 91 வரிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்காக அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கான பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கு முன்வந்தனர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க டிசம்பர் 20 ஆம் திகதி 213 வது பிரிகேட் தளபதி கேணல் எல்.ஜி.ஜே.என் ஆரியதிலக மற்றும் 4 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி கட்டளை அதிகாரியுடன் இணைந்து இந்த உபகரணங்களை விநியோகித்தனர். இந்நிகழ்வில் ஸ்ரீபாலோகா ஆரம்ப பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்