15th April 2023 08:08:16 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம் 2023 மார்ச் 25 ஆம் திகதி35 வது ஆண்டு நிறைவைக் கொண்டாட்டத்தை சமய மற்றும் சம்பிரதாய நிகழ்வுடன் ஆரம்பித்தது. ஆண்டுவிழா நாளில் (ஏப்ரல் 4) படைப்பிரிவின் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
ஆண்டு நிறைவு நாளின் முன்னோடியாக, படைபிரிவின் கீழுள்ள படையினரின் பங்கேற்புடன் 21 வது படைப்பிரிவு தலைமையக விளையாட்டு மைதானத்தில் நட்பு ரீதியிலான கரப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.
அன்றைய தினம் தளபதியினால் மரக்கன்று நடுதல், அனைத்து நிலையினருடன் மதிய உணவு, மாலை வேளையில் ஒரு பொழுதுபோக்கு அம்சம் ஆகியவை ஆண்டு விழாவில் இடம் பெற்றன.
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வட மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசம், பிரிகேட்கள் மற்றும் படையலகுகள் ஆகியவற்றின் 300 க்கும் மேற்பட்ட படையினரின் பங்கேற்புடன், அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திலிருந்து 3700 மீ நீளமுள்ள கும்பிச்சங்குளம் உடற்பயிற்சி நடை பாதையை 2 ஏப்ரல் 2023 அன்று ஒரு சமூக திட்டமாக தூய்மைப்படுத்தினர்.
அன்றைய தினம் (2) அனுராதபுரம், சாலியபுர 'சதுட அனாதை இல்லத்தில்' 31 ஆதரவற்ற பிள்ளைகளுக்கு சுவையான காலை உணவும் வழங்கப்பட்டது. அனைத்து நிலையினரின் மதிய உணவுடன் ஆண்டு விழா நிறைவு பெற்றது.