27th May 2024 14:44:57 Hours
சாலியபுர சாந்திசெவன’ முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களின் நல்வாழ்வு மற்றும் வசதியை மேம்படுத்த தனிப்பட்ட அழகுபடுத்தும் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், 21 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 18 மே 2024 அன்று முதியோர்களுக்கு முடி வெட்டும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த திட்டம் மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படையினர் 2024 மே 20 அன்று ‘சாந்திசெவன’ முதியோர் இல்லத்தின் முதியோர்களுக்கு சுவையான மதிய உணவையும் வழங்கினர்.
இராணுவ கலிப்ஸோ குழுவினால் நடத்தப்பட்ட பொழுதுபோக்குடனான இசையில், முதியோர்களின் புன்னகை கலகலப்பான பொழுதுபோக்குடன் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந் நிகழ்வில் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.