Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th June 2020 11:31:27 Hours

21 ஆவது எஸ்எல்எஸ்ஆர் படையினரால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கள்

ஓமந்தை,நாவற்குளத்தில் அமைநற்துள்ள 21 ஆவது இலங்கை சிங்க படை முகாமில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிக்கும் ஆலையானது அதிகாரிகள் மற்றும் படையினர் மத்தியில் சனிக்கிழமை 06 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

563 ஆவது பிரிகேட் படைத் தளபதி கேணல் கே.பி.ஏ பெரேரா மற்றும் 21 ஆவது இலங்கை சிங்க படை முகாமின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜே.எம்.ஜே பெரேரா ஆகியோரின் அழைப்பின் பிரகாரம் 56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.என் அமரசேகர அவர்களினால் படையினரின் நீண்ட கால தேவைப்படாக காணப்பட்ட குடிநீர் சுத்திகரிக்கும் ஆலையானது திறந்து வைக்கப்பட்டது.

குடிநீர் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசவாசிகளின் நன்மை கருதி , சிவில் இராணுவ உறவுகளை பேணுவதற்காக முகாமிற்கு வெளியில் நீர் இணைப்பானது வழங்கப்பட்டுள்ளது. Authentic Sneakers | Nike SB