Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2019 12:10:32 Hours

21ஆவது படைப் பிரிவு மற்றும் மனுசத் தெரணவினால் பொது மக்களுக்கான நன்கொடை வழங்கல்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21ஆவது படைப் பிரிவினரால் மெதவச்சிப் பிரதேசத்தில் உள்ள பொது மக்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக சேவைத் திட்டங்களில் ஒன்றாக மனுசத் தெரண தொலைக்காட்சியுடன் ஒன்றிணைந்து மெதவச்சி பல்லேகல கல்கந்தேகம பாடசாலையில் இந் நலன்புரி சேவைகளை 26ஆம் திகதி சனிக் கிழமை மேற்கொண்டுள்ளனர்.

இந் நிகழ்வின் மூலம் சிறுநீரக பாதிப்பாளர்கள் மற்றும் கண்பார்வை தொடர்பான வைத்திய சேவை முகாம்கள் போன்றன முன்னெடுக்கப்பட்டதுடன் இதன் மூலம் கண்ணாடி வில்லைகள் 350 பொது மக்களிற்கு வழங்கப்பட்டதுடன் 50 உலர் உணவுப் பொருட்கள் போன்றன கற்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டதுடன் 10 சோலார் திட்டங்கள் போன்றனவும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இத் திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமயக தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 211ஆவது படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் லால் விஜேதுங்க அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.

மேலும்ட இந் நிகழ்வில் 21ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களின் அழைப்பை ஏற்று மனுசத் தெரணவின் நிகழ்ச்சி தலைவரான திரு மகேச் ஜயவர்தன வட மத்திய மாகாண சுகாதார சேவை பணிப்பாளரான திரு பாலித பண்டார மெதவச்சி வவுணியா தெற்கின் மாவட்ட செயலாளர்கள் இலங்கை கண்தானவியலாளர்கள் மோவின் பீக் ஹோட்டலின் அதிகாரிகள் 21ஆவது படைத் தலைமையக தளபதிய உயர் அதிகாரிகள் படையினர் மெதவச்சி பிரதேச மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Asics footwear | Nike Off-White