Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2021 18:10:06 Hours

21ஆவது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் மதவச்சி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் விநியோகம்

சிரி குணருவான் சிசு திரிய அறக்கட்டளையின் திரு அஜித் ரொஹான் அவர்களின் உதவியுடன், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மதவச்சி பிரதேசத்தின் வறிய குடும்பங்களை சேர்ந்த 50 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (19) கற்றல் உபகரணங்கள் பைகள், எழுது பொருள் ஆகிவற்றை நன்கொடையாக வழங்கினர்.

23 வது ஆண்டு நிறைவு விழாவிற்கு இணையாக வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார மற்றும் 21வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த சிவில்-இராணுவ ஒத்துழைப்பு திட்டத்தின் இறுதி நிகழ்வு ஈறற்பெரியகுளம் தேசிய இளைஞர் படையணி வளாகத்தில் நடைப்பெற்றது. அதன் பிரதம அதிதியாக 21 வது படைப்பிரிவின் கர்ணல் ஒருங்கிணைப்பு கர்ணல் ஆர்.எம்.சி ரத்நாயக்க நன்கொடையளர்கள் மற்றும் 211 வது பிரிகேட் தளபதி கேணல் ஜே.கே.ஆர்.ஜயகொடி ஆகியோருடன் கலந்துக்கொண்டார்.

அதிகாரிகள், பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். Nike Sneakers | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4