01st May 2025 20:38:56 Hours
2025 ஏப்ரல் 09 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற 13வது பாதுகாப்பு சேவைகள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில், இராணுவ விளையாட்டு கழகம், கடற்படை விளையாட்டு கழகம், விமானபடை விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் பங்கேற்ற தொடர்ச்சியான கடுமையான போட்டிகளுக்குப் பின்னர் இலங்கை இராணுவ ஆண்கள் ரக்பி அணி வெற்றி பெற்றது.
ஏப்ரல் 22 ஆம் திகதி வெலிசர கடற்படை ரக்பி மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில், இராணுவ விளையாட்டு கழகம் 19-14 என்ற கணக்கில் விமானபடை விளையாட்டு கழக அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.
ஏப்ரல் 30 ஆம் திகதி ரத்மலானை விமானப்படை ரக்பி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், கடற்படை SC அணிக்கு எதிராக இராணுவ விளையாட்டு கழக அணி 29-24 என்ற கணக்கில் பரபரப்பான வெற்றியைப் பெற்றது.
இராணுவ ரக்பி குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வை இராணுவ ரக்பி குழு ஏற்பாடு செய்தது.