17th September 2024 16:07:32 Hours
இலங்கை படகோட்டம் மற்றும் கயாக்கிங்கிற்கான தேசிய சங்கம் ஏற்பாடு செய்த 8 வது படகோட்டம் மற்றும் கயாக்கிங் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் 2024 செப்டம்பர் 14 முதல் 16 வரை யாழ்ப்பாணம் மண்டைதீவு படகுக் கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, சீல் கழகம், யுனிவர்சல் கழகம், சினேக் கழகம் மற்றும் செயின்ட் பிரிகேட் கழகம் உட்பட பல கழகங்கள் மற்றும் அணிகள் பங்கேற்றன.
ஒன்பது பிரிவுகளில் போட்டியிட்ட இலங்கை இராணுவம், தொடர்ச்சியாக ஆறாவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு பெரும் எண்ணிக்கையான பதக்கங்களையும் பெற்றுக்கொண்டது.
• தங்கப் பதக்கங்கள் : 8
• வெள்ளிப் பதக்கங்கள் : 5
• வெண்கலப் பதக்கங்கள் : 6
2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டி வடமாகாண பிரதம செயலாளர் திரு. லெட்சுமணன் இளங்கோவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, வடக்கு கடற்படை கட்டளை தளபதி மற்றும் இராணுவ படகோட்டம் மற்றும் கயாக்கிங் ஸ்பிரிண்ட் குழுவின் தலைவர், ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டு இராணுவ வீராங்கனைகளின் குறிப்பிடத்தக்க சாதனைகளை பாராட்டினர்.