22nd January 2025 10:48:03 Hours
இலங்கை தேசிய செபக்டக்ரா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2024 ஆம் ஆண்டு தேசிய கடற்கரை செபக்டக்ரா சாம்பியன்ஷி போட்டி 2025 ஜனவரி 19 அன்று கல்கிசை கடற்கரையில் நிறைவடைந்தது. இலங்கை இராணுவ ஆண்கள் மற்றும் பெண்கள் செபக்டக்ரா அணிகள் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் வெற்றி பெற்றன.
இராணுவ காற்பந்து குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ செபக்டக்ரா அணிகள் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்தன.