24th September 2024 16:13:05 Hours
2024 தாய்லாந்து சர்வதேச ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் 15 நாடுகளின் பங்கேற்புடன் தாய்லாந்தின் பாங்காக்கில் 2024 செப்டம்பர் 18 முதல் 24 வரை நடைபெற்றது. இலங்கை இராணுவ ஜூடோ வீரர்கள் குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்தி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
பின்வரும் இராணுவ வீரர்கள் தங்கள் சிறந்த செயல்பாட்டிற்காக கௌரவிக்கப்பட்டனர்:
• 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கோப்ரல் டபிள்யூஏடபிள்யூபீ பிரேமரத்ன - வெள்ளிப் பதக்கம்
• 4 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.எம்.டி.ஏ. ஹேரத் – வெள்ளிப் பதக்கம்
• 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய் எம்.ஏ.எம். மார்கோ - வெள்ளிப் பதக்கம்
• 10 வது கஜபா படையணியின் காலாட் சிப்பாய் டி.ஜி.சி.எல். ஜயசுந்தர - வெண்கலப் பதக்கம்
• 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய் கே.எம்.எஸ்.எல்.பி. பஹாத் கும்புர - வெண்கலப் பதக்கம்